கர்நாடகாவிற்கு சாதகமாக தமிழிசை சவுந்தரராஜன் பேசுவது ஏற்புடையதல்ல

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, கர்நாடகாவிற்கு சாதகமாக தமிழிசை சவுந்தரராஜன் பேசுவது ஏற்புடையதல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-12

சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில், தமிழக வக்ஃபு வாரியத்தின் தலைவராக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா பதவி ஏற்றுக் கொண்டார். இதேபோல், வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.மஸ்தான், முகம்மது அபுபக்கர்  உட்பட 11 உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ் பாபு, எஸ்.ஆர்.விஜயகுமார்,ஜெயவர்த்தனன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழு நிச்சயம் அமல்படுத்தப்படும் என்று கூறினார். உறுப்பினர்கள் அதிகரித்தால்தான் அரசியலுக்கு வருவேன் என்று கமலும், ரஜினியும் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்த ஜெயக்குமார், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, கர்நாடகாவிற்கு சாதகமாக தமிழிசை சவுந்தரராஜன் பேசுவது ஏற்புடையதல்ல என்று கூறினார்.

Related Posts