கர்நாடகாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள்  இறுதிக்கட்டபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகா : மே-10

கர்நாடகாவில் மொத்தமுள்ள  224 தொகுதிகளில்,  ஒரு வேட்பாளர் இறந்ததால்  அந்த தொகுதி தவிர 223 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.  அரசியல் கட்சிகள்  மற்றும்  சுயேச்சை  என 2  ஆயிரத்து 654  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  பிரதமர் நரேந்திர மோடி,  பா.ஜ.தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி,  சோனியா காந்தி  உள்ளிட்ட தலைவர்களும்,  மத்திய அமைச்சர்களும்  முகாமிட்டு பிரச்சாரம்  மேற்கொண்டு வருகின்றனர்.   இந்நிலையில், கர்நாடக சட்டசபை  தேர்தலுக்கான பிரசாரம், இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதால் அரசியல் கட்சித்  தலைவர்கள்  இன்று  இறுதிக்கட்ட  பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கடைசி இரண்டு  நாட்களில்  வாக்காளர்களுக்கு  முறைகேடான பணம்  வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் கருதுவதால்,கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக சோதனைச் சாவடிகளில் இரவு பகலாக வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

Related Posts