கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ள பாஜகவிற்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு

கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ள பாஜகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க மதச்சார்பற்ற ஜனதாதளம்  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் நடைபெற்று வந்த மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி  ஆட்சி  சட்டப்பேரவையில்  பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால்  கவிழ்ந்தது. இதனையடுத்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா கர்நாடக முதல்வராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இருப்பினும் எடியூரப்பா வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதன்படி முதல்வர் எடியூரப்பா சட்டபேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே  மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அந்த கூட்டத்தில் குமாரசாமி, எடியூரப்பாவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து பேசியதாகவும் . இதற்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த முடிவை குமாரசாமி வெளியிடுவார் என கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts