கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லைக்கு வந்த 60 காட்டுயானைகள்

கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையில் 60 காட்டுயானைகள் தஞ்சமடைந்துள்ளதால், அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது 60 காட்டுயானைகள் வந்துள்ளன. அந்த யானைகள் வேறு பகுதிக்கு செல்லாத வகையில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் இரவு நேரங்களில் தேன்கனிக்கோட்டை, ஊடேத்துர்க்கம் வழியாக சானமாவு வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.  சானமாவு வனப்பகுதியை சுற்றிலும் தென்பெண்ணை ஆற்று நீரைக்கொண்டு நடவு செய்துள்ள நெற்பயிர்கள் நாசமடைந்து விடும் என்பதற்காக, 20க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர் ஜவளகிரி வனப்பகுதியில் தொடர்ந்து கண்காணித்து, யானைகளை திசைதிருப்பி  வருகின்றனர்.

Related Posts