கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்த உள்ளனர்

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை இன்று முதல் நான்கு நாட்களுக்கு மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்த உள்ளனர்.

கர்நாடகத்தில் குறிப்பாக, வட மற்றும் தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்கள் என மொத்தம் 17 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

அம்மாநிலத்தில் பெய்த கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 86 தாலுகாக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை மற்றும் வெள்ளத்தால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 49 ஆயிரத்து வீடுகள் சேதம் அடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் இன்று பார்வையிட உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் பேசுகையில், கர்நாடகாவில் பெய்த கனமழையால் பார்வையிடும் மத்திய குழுவினர் இன்று முதல் 27ம் தேதி வரை என மொத்தம் 4 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Posts