கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்ப்பற்ற ஜனதா தளம் இடையே உடன்பாடு

கர்நாடகத்தில் துணை முதலமைச்சர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் கைப்பற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்களிடையே இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா : மே-22

கர்நாடக முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி நாளை பதவியேற்கவுள்ளார். பெங்களூரு கண்டீரவா மைதானத்தில், பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூட்டணி அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகளை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடகத்தில் துணை முதலமைச்சர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை குமாரசாமி பதவியேற்பு நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் சார்பில் துணை முதலமைச்சரும் பதவியேற்றுக்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக சபாநாயகரை தேர்ந்தெடுப்பதே முதல் வேலை என்று தெரிவித்தார். சபாநாயகர் தேர்வுக்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் மல்லிகார்ஜின கார்கே கூறினார்.

Related Posts