கர்நாடகாவில் பாஜக அலை போல் இல்லாமல் புயலாக ஆட்சியை கைப்பற்றும்: பிரதமர் மோடி நம்பிக்கை

 

 

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக அலை போல் இல்லாமல், புயலாக வந்து ஆட்சியைக் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.  

மே-01

கர்நாடக மாநிலத்தில் வரும் 12-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்காக, சாம்ராஜ் நகர் மாவட்டம் சந்தேமரல்லி எனும் இடத்தில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பேசிய அவர்,கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு ஊழலில் ஊறிப்போய் இருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். மேலும், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை காகிதத்தில் எழுதி வைக்காமல், 15 நிமிடங்கள் பேசமுடியுமா? என்று ராகுல்காந்திக்கு சவால் விடுத்த பிரதமர் மோடிஇந்தி, ஆங்கிலம், அல்லது சோனியாகாந்தியின் தாய்மொழியான இத்தாலி ஆகிய எந்த மொழியிலும் பேச முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அலை போல வராது என்று தெரிவித்த பிரதமர் மோடி, புயலாக வந்து வெற்றிப்பெற்று ஆட்சி அமைப்போம் என்று கூறினார்.

Related Posts