கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்துடன் இணக்கமான உறவு ஏற்படும்

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்துடன் இணக்கமான உறவு ஏற்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-12

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி அமையும் பட்சத்தில், ஒரு மாதத்திற்கு பின் கர்நாடக முதலமைச்சரை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து பேசவுள்ளதாக தெரிவித்தார். கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால், விவசாயிகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

Related Posts