கர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்: பாஜக தலைவர் அமித்ஷா

 

 

கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை  சந்தித்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியதாவது ;-

கர்நாடகாவில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றிப்பெற்றது. எங்களுடைய வாக்கு வங்கியும் அதிகரித்தது. மக்களுடைய தீர்ப்பு காங்கிரசுக்கு எதிரானதுதான் என தெளிவாகியது. காங்கிரஸ் முதல்-மந்திரி தோல்வியடைந்தார், அவர்களுடைய பாதி அமைச்சர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள், ஏன் காங்கிரஸ் தோல்வியை கொண்டாடுகிறது? இதேபோன்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் தோல்வியை கொண்டாடுவது ஏன்? அவர்களிடம் இப்போது 37 தொகுதிகள் மட்டுமே உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. குதிரை பேரம் தொடர்பாக வெளியான ஆடியோக்கள் போலியானவை என காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக்கொண்டார்கள், இது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்டது. பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டது என கூறுவது முற்றிலும் அடிப்படையற்றது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி. பா.ஜ.,வுக்கு தான் மக்கள் அதிக இடங்களை அளித்தனர்.

இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார். 

Related Posts