கர்நாடகாவில் மேலும் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்

கர்நாடகாவில் மேலும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர்  ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

.கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ்  கூட்டணி ஆட்சி, கடந்த, 14 மாதங்களாக நடைபெற்று வந்தது. இம்மாத துவக்கத்தில், காங்கிரஸ்.,மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் சுயேட்சைகள் என 19 சட்டமன்ற உறுப்பினர்கள்  அரசுக்கு எதிராக தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். நீண்ட இழுபறிக்கு பின், 23-ம் தேதி,சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து முதல்வராக, பா.ஜ.கவை சேர்ந்த எடியூரப்பா நேற்று முன்தினம்  பதவியேற்று கொண்டார். இந்நிலையில் அவர்  நாளை அவர், தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க உள்ளார். இதனிடையே  அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமடஹள்ளி மற்றும் சுயேச்சை சட்டமன்ற    சங்கர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர்  உத்தரவிட்டார். இந்நிலையில்,காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  10 பேர் உட்பட 14 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது

Related Posts