கர்நாடகாவை போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் – தமிழிசை சௌந்தரராஜன்

கர்நாடகாவைபோல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று தமிழக பாஜகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நேற்று நடைபெற்ற  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

கர்நாடகாவில் மதச்சாப்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து பஞ்சாப்,  மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே தற்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடிக்கு செல்வதற்காக  சென்னை விமான நிலையத்திற்கு வந்த  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,    கர்நாடகாவை போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்றும்  கர்நாடகாவில் தாமரை மலர்வது மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுபெறுவதற்கு உதவியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடிக்கு விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சௌந்தரராஜன், புதிய கல்விக் கொள்கை அனைத்து மாநில மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அரசியலை புகுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

Related Posts