கர்நாடகா கனமழையால் ஒரு லட்சம் வீடுகள் சேதம்

சமீபத்தில்   பெய்த   கனமழை   காரணமாக  கர்நாடகாவில்  ஒரு  லட்சம் வீடுகள்  சேதம்   அடைந்துள்ளதாக  கர்நாடக   முதல்வர்   எடியூரப்பா  தெரிவித்துள்ளார்.

கர்நாடக  முதலமைச்சர்   எடியூரப்பா  திருப்பதி   ஏழுமலையானை   தரிசித்த பின்   செய்தியாளர்களுக்கு   பேட்டியளித்தார். அப்போது,  சமீபத்தில்  கர்நாடக மாநிலத்தில்  பெய்த  கனமழை   காரணமாகவும்,  தொடர்ந்து   ஏற்பட்ட வெள்ளப்  பெருக்கிலும்  சிக்கி   சுமார்   ஒரு  லட்சம்  வீடுகள்  சேதம்  அடைந்து விட்டதாக   கூறினார்.  அவற்றை   சீர்   செய்யும்   பணியில்   இரவு ,பகலாக பாடுபட்டு   வருகிறோம்   என்றார்.

முன்னதாக   அவருக்கு   தேவஸ்தான  அதிகாரிகள்   தீர்த்த,  பிரசாதங்களை வழங்கினர்.  .தொடர்ந்து   கோவிலில்  உள்ள  ரங்கநாயகர்   மண்டபத்தில் கர்நாடக   முதல்வருக்கு  தேவஸ்தான  பண்டிதர்கள்   வேத  ஆசி  வழங்கினர்.

Related Posts