கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கும் நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து மூவாயிரத்து 250 கன அடியும், கபினியில் இருந்து 8 ஆயிரத்து 500 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்துள்ளது.

Related Posts