கர்நாடக உறுப்பினர்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கர்நாடகாவில்  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 18 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்தனர். பின்னர், பாஜக வின் பாதுகாப்பில் 18 பேரும் மும்பை சென்று நட்சத்திர விடுதி ஒன்றில்தங்கியிருந்தனர். இவர்களில்ராமலிங்க ரெட்டி ராஜினாமாவை வாபஸ் பெற்றதால், அதிருப்தி  சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக குறைந்தது.  சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவால், குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.  இதையடுத்து சட்டப்பேரவையில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி  தோல்வியை தழுவினார்.இதைத்  தொடர்ந்து, கர்நாடகா பாஜ தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, கடந்த வெள்ளிக்கிழமை முதல்வராக பதவியேற்றார். இதற்கிடையே,  கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களில்  17 பேரில், 3 பேரை தகுதி நீக்கம் செய்து 2 நாட்களுக்கு முன்  பேரவைத் தலைவர்  ரமேஷ் குமார்  உத்தரவிட்டார். மற்ற 14 அதிருப்திஉறுப்பினர்களின்  ராஜினாமா மீது விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றுஅவர்  கூறினார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் 14 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின்ராஜினாமாவை பரிசீலித்ததாகவும்,  கொறடா உத்தரவு  பிறப்பித்த பிறகும், அதை மீறி 11 காங்கிரஸ் உறுப்பினர்களும், 3 மதச்சார்பற்ற ஜனதாதள உறுப்பினர்களும்   நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து உள்ளனர் என்றும் கூறினார். எனவே,  அரசியல் அமைப்பு சாசன சட்டவிதி  10ன் கீழ் இவர்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்துள்ளதாகவும், . இவர்கள் அனைவரும் 2023ம் ஆண்டு வரை  தேர்தலில் நிற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ் ஜர்ஹோலி, மகேஷ் குமதாலி மற்றும் சுயேச்சை உறுப்பினர்  சங்கர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts