கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்து நியமகவுடா கார் விபத்தில் பலி

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.சித்து நியமகவுடா கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடகா: மே-28

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சித்துநியாம் கவுடா வெற்றி பெற்றார். இதில் சித்துநியாம் கவுடா 2,975 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை அவர் வெற்றி பெற்றார். கர்நாடக தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில், நேற்று கோவாவில் இருந்து அவர் கார் மூலம் தமது தொகுதியான ஜம்கண்டிக்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதாமல் தவிர்ப்பதற்காக அவரது கார் விலகி சென்றது. இதில், எதிர்பாராத விதமாக கார் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியது. இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த எம்.எல்.சித்து நியமகவுடாவை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சித்து நியமகவுடா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சித்து நியமகவுடா உயிரிழப்பால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts