கர்நாடக சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிருப்தி – எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 4 வாரகாலம் அவகாசம்  கோரி, கர்நாடக சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம்  கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 சட்டமன்ற   உறுப்பினர்கள்    தங்கள் ராஜினாமா கடித்தை பேரவைத் தலைவரிடம்  கொடுத்தனர். இதில் ராமலிங்கரெட்டி என்பவர் மட்டும் தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுவிட்டார். மற்ற 15 பேரும்  எக்காரணத்தை முன்னிட்டும்  ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.

இதையடுத்து  முதல் அமைச்சர் குமாரசாமி கடந்த 18-ந்தேதி தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் சட்ட சபையில் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே கடந்த 19ந்தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமிக்கு, ஆளுநர் வஜூபாய்வாலா உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை குமாரசாமி ஏற்கவில்லை. இதனிடையே,  சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு நேற்று காலை சட்டசபை கூடியது.  அப்போது,, நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் முடிந்த பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பேரவைத் தலைவர் கூறினார்.இந்நிலையில்  ராஜினாமா செய்துள்ள 15 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் கொறடா மனு அளித்தார். இதனை தொடர்ந்து    15அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் நேற்று நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், நேரில் ஆஜராகி விளக்கம் தர 4 வாரங்கள் அவகாசம் தேவை என மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகா சட்டப் பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனிடையே  குமாரசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்று மாலை 6.00  மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்

Related Posts