கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டுஉடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

கர்நாடகா : மே-14

224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்குகடந்த 12ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்,  72 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2013-ம் ஆண்டு பதிவான வாக்குகளை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பெட்டிகள்அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில், 283 அரங்குகளில் இந்த வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நாளைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுவதால் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Posts