கர்நாடக சட்டமன்றத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

 

 

கர்நாடக சட்டசபையில் முதலமைச்சர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார்.  இதை முன்னிட்டு புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுனர் உத்தரவிட்டார். ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டார். அதன்படி தற்காலிக சபாநாயகர் போபையா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது.பாஜக எம்எல்ஏக்கள் ஏற்கனவே வந்திருந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள சொசுகு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து, சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related Posts