கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது

கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-20

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் 71 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைக்கப்பட்டது. சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார். மேலும், கர்நாடகாவில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

Related Posts