கர்நாடக முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்பு

 

 

கர்நாடக முதலமைச்சராக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி நாளை பதவியேற்கவுள்ளார்.

கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ.க 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப்பற்றின. தனிப்பெருங்கட்சியான, பா.ஜ.க சார்பில், முதலமைச்சராக பதவியேற்ற, எடியூரப்பா, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன், காங்கிரஸ் இணைந்து, ஆட்சி அமைக்கவுள்ளது. முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி, பெங்களூருவில் நாளை பதவியேற்கவுள்ளார். அவருக்கு, கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்   குறிப்பாக பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  

Related Posts