கலந்தாய்வை ரத்து செய்ய முடியாது : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவக் கல்லூரிக்கான கலந்தாய்வை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த சோம்நாத் நேயா உள்பட பலர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். அதில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவக் கல்லூரிக்கான கலந்தாய்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், அதனை முழுமையாக ரத்து செய்து, புதிய கலந்தாய்வு நடத்துவது சாத்தியமல்ல என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. தேவைப்பட்டால், வெளிமாநிலத்தவரின் சான்றிதழ்களை அரசு சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ள நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Posts