கல்லூரி தேர்வுக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை : உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் புதிய வக்குபறைகள், ஆய்வகக் கட்டடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.பி அன்பழகன், அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Related Posts