கல்வராயன் மலைப்பகுதியில் பலாப்பழம் நல்ல விளைச்சல் – விவசாயிகள் மகிழ்ச்சி

ஆத்தூர், கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் பலாப்பழம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் : மே-18

பலாப்பழ சீசன் தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கல்வராயன் மலைப்பகுதியில், கருமந்துறை, பகடுப்பட்டு, மணியார்குண்டம், கரியகோவில், காட்டுவளவு உள்ளிட்ட பல கிராமங்களில் பலாப்பழம் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. கல்வராயன் மலைப்பகுதியில் விளையக்கூடிய பலாப்பழம் பன்ருட்டி பகுதியில் விளையக்கூடிய பழத்தைக் காட்டிலும் சுவையாகவும் தரமாகவும் இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் அதனை வாங்கிச் செல்கின்றனர். இங்கு விளையக்கூடிய பலாப்பழத்திற்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts