கல்விமுறை குறித்து ஆய்வு செய்வதற்காக ஃபின்லாந்து சென்றுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்

கல்விமுறை குறித்து ஆய்வு செய்வதற்காக ஃபின்லாந்து சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அந்நாட்டில் உள்ள முன் தொடக்கப்பள்ளியை பார்வையிட்டார்.

பின்லாந்தில் 6 வயதில்தான் குழந்தைகள் முன் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். 7 வயதில் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். ஃபின்லாந்து கல்விமுறையை உலக நாடுகள் கொண்டாடும் நிலையில், 7 நாள் பயணமாக அந்நாட்டுக்குச் சென்றுள்ள செங்கோட்டையன், ஜோன்ஸ் ஹெய்னாபுரோட்டில் உள்ள லிலுன்லாட்டி முன் தொடக்கப் பள்ளியை பார்வையிட்டார். முன்தொடக்கப்பள்ளியில் கற்பிக்கும் முறை, கற்றல் உபகரணங்கள், மாணவர்களின் கற்கும் திறன் உள்ளிட்டவைகள் குறித்து அப்பள்ளியின் முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடினார். முன்னதாக, இன்று காலையில் வடக்கு கரிலியா மண்டல மேயரான ரிஸ்ரோ பாவ் நேம்-ஐ மரியாதை நிமித்தமாக அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார். தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று, கல்வி அதிகாரிகள், அறிஞர்களுடனும் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Posts