கல்வி திட்டங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு : பிரதமர் மோடி

        வரும் 2022-ம் ஆண்டிற்குள் கல்வி திட்டங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

      டெல்லியில் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய அவர், பாஜக தலைமையிலான அரசு கல்வித்துறையில் முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், கல்வித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரைஸ்  எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் வரும் 2022-ம் ஆண்டிற்குள் கல்வி திட்டங்களுக்கு  1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும்,.கல்வித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். எனவும் அவர் குறிப்பிட்டார். பழங்கால இந்தியாவில் அமைந்திருந்த  நாலந்தா, தட்சசீலம், விக்கிரமசீலம் போன்ற பல்கலைக்கழகங்கள், கற்பதற்கும் புதுமை படைப்பதற்கும் சமமான முக்கியத்துவம் அளித்ததாக அவர் தெரிவித்தார். பள்ளிக்குழந்தைகள் மத்தியில் புதுமை படைக்கும் போக்கை ஊக்குவிப்பதற்காகவே, அடல் டிங்கரிங் லேப் ஆய்வகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள், பாடத்திட்டம், ஆசிரியர் நியமனம், விரிவாக்கம் உள்ளிட்டவற்றை தாங்களே தீர்மானிக்கும் வகையில் மத்திய அரசு தன்னாட்சி வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் உயர் கல்வித் துறை முன்னெப்போதும் கண்டிராத பாதை இது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Posts