கல்வி பெண்களுக்கு மிக அவசியம் : துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

மாணவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொள்ளாமல் தனியாக உழைத்து வெற்றி அடைய வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கலை மற்றும் கலாச்சார கருத்தரங்கில்  தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், கல்வி பெண்களுக்கு மிக அவசியம் என்று கூறினார். கற்கும் திறனை உயர்த்த தான் கருத்தரங்கள் நடத்தப்படுவதாக கூறிய அவர், இதேபோன்ற கருத்தரங்கில் அனைவரும் ஈடுபாடுடன் கலந்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாணவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொள்ளாமல் தனியாக உழைத்து வெற்றி அடைய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Related Posts