கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகல்

 

 

கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி  விளையாடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை 3-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அப்போது, இங்கிலாந்தில் நடக்கவுள்ள கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில், சர்ரே அணியில் இணைந்து விளையாட இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் போது, கோலியின் முதுகெலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், கவுண்டி போட்டிகளில் விராட்கோலி பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், ஜுன் 15-ம்தேதி நடத்தப்படும் உடற்தகுதித் தேர்வுக்குப் பின்புதான், விராட்கோலி இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Related Posts