காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏடிஎம் எந்திரம் போல பயன்படுத்தியது:  பிரதமர் மோடி 

மக்களவைத் தேர்தலுக்காக மத்திய பிரதேசத்தின் ராட்லம், இமாச்சலபிரதேசத்தின் சோலன், பஞ்சாப்பின் பத்திண்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது பாதுகாப்பு படைகளின் தேவைகளில் 70 சதவிகிதம் வெளிநாடுகள் மூலமே பூர்த்தி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

ராணுவ தளவாட உற்பத்தியில் 150 ஆண்டுகள் அனுபவம் இருந்தும் இந்தியா இன்னமும் இறக்குமதியை நம்பி இருப்பதற்கு காங்கிரசின் தவறான கொள்கைகளே காரணமென அவர் கூறினார்.

பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களை ஏடிஎம் எந்திரம் போல காங்கிரஸ் அரசு பயன்படுத்தியதாக கூறிய அவர், பாஜக ஆட்சியில் தான் இந்த நிலை மாறி உள்ளது என்றார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோரின் எண்ணிக்கை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாட்டு மக்கள் தொகையை விட அதிகம் என அவர் தெரிவித்தார்.

Related Posts