காங்கிரஸ் அறிக்கை சூப்பர் ஹீரோ, பா.ஜ.க அறிக்கை ஜீரோ மு.க.ஸ்டாலின் 

 

சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் பொன்.கவுதம சிகாமணி, ஆகியோரை ஆதரித்து சீல நாயக்கன்பட்டியில் திமுக கூட்டணி கட்சியின் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் , தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின்,  நாடும் நமதே நாற்பதும் நமதே என ராகுல்காந்தியிடம் தாம் உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார்.

திராவிட இயக்கத்தின் எண்ணங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பிரதிபிலிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ள ராகுலை அண்ணா இருந்திருந்தால் உச்சி முகர்ந்து வாழ்த்தியிருப்பார் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Related Posts