காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம்: ராகுல் காந்தி 

உத்தரபிரதேச மாநிலம் தாதாகஞ்ச் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட  ராகுல்  காந்தி, கோடிகளில் கடன் வாங்கிய வர்த்தக பிரமுகர்கள் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் அவர்களை சிறைக்கு அனுப்புவதை தவிர்த்து நாட்டைவிட்டு பறந்துசெல்ல அனுமதிக்கிறார்கள் என்று கூறினார்.

 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய விவசாயி கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் சிறையில் தள்ளிவிடுவதாக கூறிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை சிறைக்கு அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்தார். கடனை செலுத்தாத பெரும்புள்ளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என கூறிய அவர், மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். இதேபோன்று நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார் .

Related Posts