காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல்: ராகுல் காந்தி

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி, உன்னா ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். தற்போது, 20 ஆயிரம் ரூபாய் வங்கிக்கடனை திரும்ப செலுத்த தவறினால் கூட விவசாயிகளை சிறையில் தள்ளும் நிலை உள்ளது எனவும், விவசாய பட்ஜெட், இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  இதேபோல் , 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 72 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும், . என்ன விலை கொடுத்தாவது அந்த்த் திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  ஆனால், பிரதமர் மோடி குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் தருவேன் என்று கூறி ஏழைகளை ஏமாற்றி விட்டார் எனவும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டை பெரிதும் பாதித்துள்ளது எனவும் அவர் கூறினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் 3 ஆண்டுகளுக்கு வியாபாரிகள் எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டி இருக்காது என குறிப்பிட்ட ராகுல்காந்தி,  நாட்டில் நிலைமை வேகமாக மாறி வருவதாகவும் “காவலாளி ஒரு திருடன்” என்று  மக்கள் கூறத் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.

Related Posts