காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைவரது வங்கிக் கணக்கிலும் 3 லட்சத்து 60 ஆயிரம் செலுத்துவோம்: ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளில் 5 கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. இன்னும்  இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே நடைபெறவுள்ளன. வரும் 19-ம் தேதியோடு நிறைவடையும் வாக்குப்பதிகள் மொத்தமாக 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், ஹரியானாவின் சிர்ஸாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, அனைவரது வங்கிக்  கணக்கிலும் 15 லட்சம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்த்தாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 5 வருடங்களுக்குள் அனைவரது வங்கிகணக்கிலும் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலுத்துவோம் என்று உறுதிபட கூறினார்.

Related Posts