காங்கிரஸ் கட்சி தனக்கு மட்டும் நெருக்கடி தருவதாக கராத்தே தியாகராஜன் பேட்டி

தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என பல தலைவர்கள் பேசியபோதிலும், தனக்கு மட்டும் கட்சியில் நெருக்கடி தரப்படுவதாக  கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் சென்னையில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அன்பை பெற்றவன் என்றும்,  அவருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்  என்றும கூறினார்.எந்த கட்சிக்கும் போகப் போவதில்லை எனவும், தான் மிகவும் மதிக்கும் தலைவரான ப.சிதம்பரத்துக்கு விசுவாசமாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் பல தலைவர்கள் பேசினார்கள் என்றும் . ஆனால், தனக்கு மட்டும் கட்சியில் நெருக்கடி தரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு தெரிந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையா? அல்லது நேரடியாக வேணுகோபால் எடுத்தாரா? என தெரியவில்லை என்று அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் சொத்தை கொள்ளையடித்த கோபண்ணா, புத்தகம் போட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்தவர் என்றும்  மூடப்பட்ட பத்திரிகையின் பெயரில் பாஸ் அச்சடித்து விற்பனை செய்தவர்  என்றும் அவர் சரமாரியாக குற்றம்சாட்டினார். தன் மீதான நடவடிக்கைக்கு கோபண்ணாதான் காரணம் என்றும் அவர் மீது நாளைசென்னை காவல்துறை ஆணையர் அலுலவகத்தில் புகார் கொடுக்க போவதாகவும் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

Related Posts