காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் சுதந்திர தினம் கொண்டாட்டம்

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்களான கபில் சிபல், அகமது படேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts