காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வரும் 12-ந்தேதி வெளியிடப்படும் – கமல்நாத்

 மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வரும் 12-ந்தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.

                மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஜோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. மத்தியபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை அகற்றி, அங்கு காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அந்த கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

                 இதுதொடர்பாக மாநில தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத் கூறுகையில், மத்தியபிரதேசத்தில் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர் பார்ப்பதாகவும்,தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க இருப்பதாகவும் கூறினார். ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரசில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ள நபர்கள் யார்? என்பது பற்றி தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தி வருவதாகவும், செப்டம்பர் 12-ந்தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

Related Posts