காங்கிரஸ் திமுக கூட்டணி – திருநாவுகரசர்

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை நான்கு வாகனங்களில் திருநாவுக்கரசர் அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கேரள மக்களுக்கு உதவும் வகையில் 35 லட்சம் ரூபாய் நிதியாகவும், 25லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களும் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

மன வலியோடு, துன்பத்தோடு ஓணம் பண்டிகையை நினைவு கூறும் கேரள மக்களுக்கு, ஒணம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார். கல்லணை, முல்லை பெரியாறு போன்ற அணைகள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை எனவும் அவற்றை தமிழ அரசு மறு ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், இதில் கூட்டணியில் இல்லாத, கருத்த வேறுபாடு உள்ள கட்சிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமித்ஷா வந்தாலும் வரவில்லை என்றாலும், காங்கிரஸ் திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Related Posts