காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திரவரதரை தரிசனம் செய்தார்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்திருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்தார். காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் 23 வது நாளாக நடைபெற்றது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். புதன்கிழமை மாலை காஞ்சிபுரம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓரிக்கை பகுதியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம், பெரியார் நகர் பகுதிகளில் வாகன நிறுத்தும் இடம் மற்றும் நான்கு மாட வீதியில் பொதுமக்கள் வரிசையில் நிற்கும் இடங்களில் ஆய்வு செய்தார். பின் கழிவறை , குடிநீர் டேங்குகள் ஆகியவற்றை அதிகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கோவிலுக்கு சென்ற முதலமைச்சர் அத்திவரதரை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும்,இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related Posts