காங்கிரஸ் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்: கே.எஸ். அழகிரி

காரைக்குடியில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் மீதும், தமிழக அரசு அதிகாரிகள் மீதும் மக்கள் நம்பகத்தன்மையை இழந்து வருவதாக தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மதசார்பற்ற கூட்டணி தமிழகத்தில் தான் வலிமையாக உள்ளது என்று  கூறினார்.

மக்கள் மன்றத்தின் மூலமாக ஆட்சி மாற்றம் கொண்டு வருவோம் என்று தெரிவித்த அவர், வெற்று வெள்ளை பேப்பரில் கருப்பு மயில் எழுதப்பட்ட துணிக்கடை விளம்பரம் தான் பாஜக தேர்தல் அறிக்கை என்று அவர் கூறினார். தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 1000 ரூபாயை முதற்கட்டமாக பட்டுவாடா செய்து முடித்து விட்டார் என்று குற்றம் சாட்டிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழகத்தில் 4 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

Related Posts