காடுவெட்டி குரு மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல்

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, அரசியல் எல்லைகளை கடந்து தன்னிடம் நட்பு பாராட்டியவர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-26

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வன்னியர் சங்கத் தலைவராகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியத் தளகர்த்தராகவும திகழ்ந்த காடுவெட்டி குரு அவர்கள், சமூகநீதி காக்கும் போராளியாக வாழ்ந்தவர்; அரசியல் எல்லைகளைக் கடந்து என்னிடம் நட்பு பாராட்டிப் பழகியவர். அவர் உடல் நலம் இன்றி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைக் கேள்விப்பட்ட உடனேயே, அங்கே சென்று சந்தித்தேன்.  அவருக்குச் சிகிச்சை தந்த மருத்துவர்களையும் சந்தித்து, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்லி வந்தேன்.

இன்னும் பல ஆண்டு காலம் வாழ வேண்டிய சகோதரர் காடுவெட்டி குரு அவர்கள் மறைவினால், துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு, பா.ம.க. தோழர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related Posts