காதலர் ஆனந்த் அகுஜாவை கரம்பிடித்தார் சோனம் கபூர்

 

 

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் தனது காதலரும் தொழிலதிபருமான ஆனந்த் அகுஜாவை இன்று திருமணம் செய்தார். இத்திருமண விழாவில் அமிதாப் பச்சன், கரீனா கபூர், ராணி முகர்ஜி உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

மும்பை பாந்த்ராவில் சோனம் கபூரின் அத்தையின் வீட்டில் நெருங்கிய சொந்தபந்தங்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்க திருமணம் சிறப்பாக நடைபெற்றது.நடிகர்கள் ஆமீர் கான், கரீனா கபூர், ராணி முகர்ஜி, இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர் கலந்து கொண்டனர். சோனம் கபூரின் சகோதரி ரியா கபூர் இன்ஸ்டாகிராமில் சோனம் கபூர் – ஆனந்த் அஹூஜாவின் திருமண புகைப்படத்தை பகிர அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Related Posts