காதலர் தினத்தை முன்னிட்டு கொய்மலர்கள் ஏற்றுமதி

காதலர் தினத்தை முன்னிட்டு கொடைக்கானலிலிருந்து ஆயிரக்கணக்கான கொய்மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் பிரகாசபுரம் , குண்டு பட்டி, கவுஞ்சி போன்ற பகுதிகளில்  பல ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனங்கள் தோட்டம் அமைத்து  உயர்ரக பூக்கள்  வகைகளான கார்னேசன், ஜிப் சோப்ர, சார்ட்டிஸ், அஷ்டோமேரிய, பேர்ட் ஆப் பாரடைஸ் போன்ற பூக்களை  பயிரிட்டு ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்த  உயர்ரக பூ வகைகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் மலர் கொத்துகளாக வழங்குவதற்குப் பயன்படுகின்றன.  அந்த வகையில் காதலர் தினத்தில் ரோஜா பூ மற்றும் இந்த கொய்மலர்களை காதலர்கள் தங்களது காதலிக்கு  பரிசாக கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது வழக்கமாக உள்ளது.  இந்த உயர் ரக பூக்கள் மற்ற தினங்களில் சுமார் 100 ரூபாய்க்கும் காதலர் தினம் மற்றும் பண்டிகை நாட்களிலும் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது  இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பூக்கள் கொடைக்கானலிருந்து பெங்களூர் மற்றும் சென்னை பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts