காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அன்குர் மித்தல் வெண்கலம் வென்றார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அன்குர் மித்தல் வெண்கலப்பதக்கம் வென்றார்.

கோல்ட் கோஸ்ட் :  ஏப்ரல்-11

காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தியா 12 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில், இன்று ஆண்களுக்கான டபுள் டிராப் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் நடைபெற்றது.

இதில், இந்திய வீரர் அன்குர் மித்தல் வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இப்போட்டியில் தங்கப்பதக்கத்தை ஸ்காட்லாந்து வீரர் டேவிட் மெக்மாத்தும், வெள்ளிப்பதக்கத்தை ஐசில் ஆப் மான் வீரர் டிம் நீலேவும் தட்டிச் சென்றனர். இதன்மூலம், இந்தியா 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

Related Posts