காமன்வெல்த்: துப்பாக்கி சுடுதலில் ஷ்ரேயாசி சிங் தங்கப்பதக்கம்

 

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இன்று தங்கம் உள்பட 3 பதக்கங்களை வென்றுள்ளது. காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷ்ரேயாசி சிங் தங்கப்பதக்கம் வென்றார். 

ஏப்ரல்-11

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிருக்கான டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ஸ்ரேயாசி சிங் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 50மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஓம் பிரகாஸ் மிதார்வால் வெண்கலப் பதக்கம் வென்றார். இது தவிர ஆண்கள் டபுள் டிராப் பிரிவில் அங்குர் மிட்டல் வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன்மூலம், இந்திய அணி 12தங்கம், 4 வெள்ளி, 8வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது.

Related Posts