காமன்வெல்த் பெண்கள் ஹாக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா தோல்வி

காமன்வெல்த் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா : ஏப்ரல்-05

காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் ஆக்கி போட்டியில் இந்தியா ‘ஏ’ பிரிவில் உள்ளது. இதில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, மலேசியா, வேல்ஸ் ஆகிய அணிகள் உள்ளது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் இன்று மோதியது. இதில் 2-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்தியா தரப்பில் ராம்பால் 34-வது நிமிடத்திலும், பிரதன் 41-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். வேல்ஸ் அணியில் டேலே, பிரெஞ்ச், ஜோன்ஸ் ஆகியோர் கோல் அடித்தனர்.

Related Posts