காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் ஜித்து ராய்: பதக்கப் பட்டியலில் 3வது இடத்தில் இந்தியா

 

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் துப்பாக்கிசுடுதல் போட்டியில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் ஜித்துராய் தங்கம் வென்றார். இந்நிலையில் இந்தியா 8 தங்கம், 3வெள்ளி, 4வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3 இடத்தில் உள்ளது.

ஏப்ரல்-09

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்தியா ஏற்கனவே 7 தங்கம் வென்றுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.

இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜித்துராய் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலப் பதக்கம்  வென்றார். 

இதையடுத்து, நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில், இந்திய வீராங்கனை மெஹுலி கோஸ் வெள்ளிப் பதக்கத்தையும், அபூர்வி சந்தேலா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

முன்னதாக நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 105 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பர்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. 31 தங்கம் வென்றுள்ள ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. 

Related Posts