காமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு

காமன்வெல்த் விளையாட்டு போட்டியானது அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் ஹாக்கி விளையாட்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 18 வகை விளையாட்டுகளில் 275 பிரிவுகளில் மொத்தம் 70 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கவுள்ளனர். இதில், ஹாக்கி விளையாட்டுக்கான அட்டவணையை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தொடரில் பங்கேற்றுள்ளன. ஆடவர் பிரிவை பொறுத்தவரை இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும் படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, கண்டா ஏ பிரிவிலும், பி பிரிவில் இந்தியா, வேஸ்ல், மலேசியா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில், ஆசிய கோப்பையை இந்திய ஆடவர் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மகளிர் பிரிவுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடக்க ஆட்டத்தில் வேல்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

Related Posts