காமன்வெல்த் 2018: 2-வது தங்க பதக்கத்தை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா : ஏப்ரல்-06

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.

இந்த நிலையில், மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்று அசத்தினார். காமென்வெல்த் போட்டியில் நேற்று, இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. இதன்மூலம் பதக்கப்பட்டியலில், 2 தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Related Posts