காரஸ் மார்க்சின் 201 வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்

கம்யூனிச சித்தாந்தத்தின் பிதாமகனான காரஸ் மார்க்சின் 201 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜெர்மனி : மே-05

ஜெர்மனியில் பிறந்த காரல் மார்க்ஸ் உலகின் பரிணாம வளர்ச்சியை நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், சோசலிசம் என வகுத்தார். கிழக்கு ஜெர்மனி, சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளில் கம்யூனிச அரசுகள் கவிழ்ந்தபோதும், காரல் மார்க்ஸ் மிகப்பெரிய அறிஞராக இன்றும் போற்றப்படுகிறார். காரல் மார்க்சின் மார்க்சீய சித்தாந்தம் வழிகாட்டியாக இருப்பதாக சீனஅதிபர் சீ ஜின்பிங் அண்மையில் உரை நிகழ்த்தினார். மார்க்சீயம் தழைத்த நாடுகளான ஜெர்மனி, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் காரல் மார்க்சின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட பிரம்மாண்டமான மார்க்ஸ் சிலை ஜெர்மனியின் ட்ரியர் நகரில் இன்று நிறுவப்படுகிறது.

Related Posts