காரைக்காலில் முதன் முறையாக பாரம்பரிய நெல் கண்காட்சி

காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியில் முதன் முறையாக பாரம்பரிய நெல் கண்காட்சி நடைபெற்றது.

இதில் 174 பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட வேளாண் வல்லுநர்கள் பழமையான நெல்வகைகளுக்கு விவசாயிகள் திரும்பினால் மட்டுமே நோய் நொடியின்றி வாழ முடியும் என்றும் ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களையும், தொழு உரங்களையும் பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் பாஸ்கரன், கல்லூரி முதல்வர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts