காரைக்காலுக்கு தண்ணீர் வரவில்லை – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

   கால்வாய்களை தமிழக அரசு தூர்வாராததால் காரைக்காலுக்கு தண்ணீர் வரவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

      புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில்,  திருமலைராஜன் ஆறு, அரசலாறு, நாட்டாறு, முல்லையாறு, பிரவிடையான் ஆறு, வாஞ்சி ஆறு ஆகிய காவிரி கிளை ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் திருமாலை ராஜன், அரசலாறு ஆகியவற்றில் மட்டுமே தண்ணீர் வருகிறது. மற்ற ஆறுகளில் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, காவிரி கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வராததற்கு, கால்வாய்களை தமிழக அரசு தூர்வாராததே காரணம் என குற்றம்சாட்டினார். மேலும், காவிரி கடைமடைப்பகுதியில் உள்ள கருவேல மரங்களை வெட்டி ஆறுகளை தூர்வார வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். புதுவை விவசாயிகளுக்கு தேவையான விதைகள் உரங்கள் இருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts